Sunday, November 29, 2009

Sri mathura kali amman


2 comments:

Ponnammal said...


பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் ிறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது. காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம். குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக் இருப்பதால் இங்கு வரும் பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மாவிளக்கு ஏற்றுதல் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன் ஆகும். அங்கபிரதட்ணம் செய்வதும் பக்தர்களால் செய்யப்படும் புகழ்பெற்ற நேர்த்திகடன் ஆகும். நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்யபாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம். மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள். செல்லியம்மன், அன்னை திறம் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள். சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவேதான் திங்கள் வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.

சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே, மிக பிரசித்தி பெற்ற திருக் கோயிலாகும், அம்பிகை என பக்தர்கள் கூறவே மக்களால் குலதெய்வமாக வணங்கப்படும் , பேசும். பேசியது…பேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். ஒரு நடமாடும் தெய்வம் - மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். நம் துயர் களைவதற்காகவே - கருணையே தவிர - அம்பாளை பார்த்து விட்டோம் என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். .அடியார்கட்கு அருள் செய்ய, வேண்டுதல்களையும் நிறைவேற்ற அமர்ந்துள்ளாள். அருட்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாகும். குடும்ப தீராத வழக்குகளை, பிரச்னை தீர, தம்பதியர் ஒற்றுமைக்காகவும், குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தியடைய, வாழ்வில் நன்மைகள் பல பெற்று, திருமண தடை நீங்கவும், பூர்வஜென்ம வினை பிணிகள் தீர, மாங்கல்ய பாக்கியத்திற்கும், தோஷ சாப நிவர்த்திக்காகவும், ஐஸ்வர்யம் பெருகவும், இங்கு வேண்டிக்கொள்கிறர்கள். அம்மன் வடக்கு திசை நோக்கி அருளும் நிலையிலேயே காட்சி. திருமணமான தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அடுத்தாண்டு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. இது ஒரு சக்தி பீடமாகும்.
வெள்ளி கிழமைகளில் மாலை பக்தர்கள் தங்க தேர் இழுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு புடவை சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். சிறப்பு அபிஷேகம், எலுமிச்சை தீபம், மாவிளக்கு
ஏற்றலாம். கரங்களில் சூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறாள். . மாங்கல்ய பாக்கியத்திற்கு, மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
இங்கு தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

Balasubramanian NR said...

ஸ்ரீ மதுரகாளியின் அருளின் வடிவாகி அவள் உறவாகி இரவு பகலாக காக்கும் நம் துணையாகி நோய் நொடிகள் தீர்க்கும் மருந்தாகி, தீவினைகள் துயரக் கடலில் மூழ்கி, அதனின்று காப்பது, மாய்க்கும் அருளாகி அவள் அருளின் முதலாகி இருக்கும் அவள் நாமம் ஜெயம் ஜெயமே. குலம் திருப்தியாயிருக்க எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒன்ரும் இல்லை. ஜனங்களை ரொம்பவும் வசீகரம் செய்யும் தாயே, நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன். நம் அகத்தை விளங்க வைக்கும் கிருஹலக்ஷ்மி. நாம் கவனிக்கும்போது ஆதாரங்களிலிருந்து நம்பிக்கை நிஜம்தான் என்று சொல்லப்படுகிறது. நிச்சயப்படுத்தும் அபிப்ராயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.