Wednesday, August 5, 2009

murugan songs tamil lyrics MURUGA UNAKKU PUGAZH MAALAI


முருகன் பாடல்கள் 1
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே என் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிட தானே அதிகாலை

தூவிட குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு
பாதத்தில் வைத்திட மனமுண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து

ஆலயம் என்பதுன் நிழல் தானே
அணையா தீபமுன் அருள் தானே
காலமும் துணையும் நீ தானே
கருணையை போழிவதுன் விழி தானே

தெய்வயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்
தோன்றிட நீதரும் திருக்காட்சி
மங்களம் பெருகிடும் அருட்காட்சி

1 comment:

Bharathi S said...

Kindly let me know, who is the composer of this song