பச்சை மயில் ஏறி வாருமையா
பார்வதி பாலகனே
தேவாதி தேவனே
தேவர்க்கு அணுகுலனே (பச்சை)
அன்னை வள்ளி தெய்வானை யூடனே
அன்புடனே வந்த காந்தியனே
என்ன பாக்கியம் செய்தேனோ ஈசா உந்தனை காண
நேசா பழனிமலை வாசா கைலாசனே (பச்சை)
சூரனை சம்ஹாரம் செய்த
சுப்ரமணிய தண்டாயுதனே
தாரக சம்ஹரித்த சரவண ஷண்முகனே
சரணம் சரணம் உந்தன் கருணை கண்காட்சியே (பச்சை)
No comments:
Post a Comment